தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கொளத்தூரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கொளத்தூரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரியும் வாக்கு பதிவு இயந்திரங்கள் முழுமையாக சரி பார்க்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு ,ஒரு தேர்தலின் முடிவை எதிர்த்து அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 226 இன் கீழ் ரீட்மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும் என்றும் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வி .எஸ் .பாபு 82, 1997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 74,220 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு செய்ய மே மாதமே விண்ணப்பிக்கும் தேர்தல் ஆணையம் அதனை ஜூலை மாத இறுதி வரை தள்ளிப் போட்டதாகவும் இந்த தாமதத்தின் காரணமாகவே காலக்கெடுவுக்குள் தேர்தல் வழக்கை முழுமையாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட குளறுபடியை கண்டறிந்ததனால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டதாக திமுக சார்பாக வாதிடப்பட்டது.
Tags :



















