நடிகை வீட்டில் ரூ.20 கோடி பணம் பறிமுதல்
மேற்குவங்காள ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அர்பிதா பானர்ஜி வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அர்பிதாவின் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
Tags :