முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த அன்புமணி
பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் தம்பதியரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கும் சங்கமித்ராவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் சிலர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று இருந்தாலும் கொரோனா காலம் என்பதால் நெருக்கமான உறவினர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததுஇந்த நிலையில் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடக்க உள்ளது. இந்த வரவேற்பு விழாவிற்காக பல்வேறு அரசியல் தலைவர்களை அன்புமணி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் தனது மகளின் திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்தார்.ன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி இந்த சந்திப்பில் உடன் இருந்தார். முகம் முழுக்க சிரிப்போடும், பூரிப்போடும் முதல்வர் ஸ்டாலின் இருவரையும் வரவேற்றார். திருமணம் குறித்தும், மாப்பிள்ளை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அன்புமணியிடம் விசாரித்தார். அதோடு ராமதாஸின் உடல்நிலை குறித்தும் ஸ்டாலின் விமர்சித்தார்.
Tags :