புதுமைப் பெண் திட்டம்: 13,000 மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் கீதாஜீவன்

by Staff / 11-03-2023 01:21:39pm
புதுமைப் பெண் திட்டம்: 13,000 மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் கீதாஜீவன்

முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் படிப்பை கைவிட்ட 13 ஆயிரம் மாணவிகள் மீண்டும் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  கூறினார். தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் தமிழ்கனவு என்கிற சொற்பொழிவு நிகழ்ச்சி தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo