தமிழக மாவட்டங்களில் கடலோர  மழை வாய்ப்பு.

by Editor / 04-01-2023 07:30:41am
தமிழக மாவட்டங்களில் கடலோர  மழை வாய்ப்பு.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும்  விழுப்புரம், கடலூர், நாகை, ராமநாதபுரம், அதனை ஒட்டிய தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via