கோர ரயில் விபத்து.. 4 பயணிகள் பலி

by Staff / 17-06-2024 11:17:45am
கோர ரயில் விபத்து.. 4 பயணிகள் பலி

மேற்கு வங்கத்தில் இன்று (ஜூன் 17) காலை 9:30 மணியளவில் பயங்கர ரயில் விபத்து நடந்துள்ளது. சீல்டாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் மீது சரக்கு ரயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால், காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 4 பயணிகள் பலியான நிலையில் பலர் காயம் அடைந்துள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via