தெளிவான திரைக்கதை படத்தை பார்க்க தோன்றுகிறது

by Admin / 17-06-2024 11:18:58am
தெளிவான திரைக்கதை படத்தை பார்க்க தோன்றுகிறது

விதார்த் நடித்த குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கி  விஜய்சேதுபதி,அபிராமி, திவ்யபாரதி, ராமதாஸ்,சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்த மகாராஜா திரைப்படம் மூன்று நாட்களில் 22 கோடியை வசூரில் ஈட்டி கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறந்து பக்ரீத் பண்டிகையை ஒட்டி ய மூன்று நாள் விடுமுறை என்பதால் படத்திற்கான ரசிகர்களின் வருகை திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது 

கதையும் கதை போக்கும் விஜய் சேதுபதியின்  இயல்பான நடிப்பும் ஒளிப்பதிவும் இயக்கமும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்து படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. ஒரு சாதாரண முடிவெட்டும் தொழில் செய்யும் விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் தன்னுடைய வீட்டில் உள்ள குப்பை தொட்டியை திருடிவிட்டதாகவும் அதை மீட்டு தந்தாள் திருடிய மூன்று பேரை தான் பார்த்ததாகவும் அவர்கள் துடித்தால் ஏழு லட்ச ரூபாய் தருவதாகவும் பேரம் பேசி.. ஒரு முரட்டு பிடிவாத காரணமாகவும் அழுத்தமானவனாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதியினுடைய நடிப்பு ....படத்தின் இறுதி கட்டத்தில்தான் எதற்காக விஜய் சேதுபதி காவல் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்து கிடக்கிறார் என்பதை கிளைமாக்ஸ்  வெளிப்படுத்துகிறது.. படத்தை பார்ப்பவர்கள் முக்கால் பாகம் முடியகிற வரைக்கும் ஒரு குப்பை தொட்டிக்காக இப்படியாக மனுஷன் போராட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற பொழுது.... கதையின் போக்கு வேறு... வேறு காட்சிகளோடு கதையின் மைய புள்ளியை நோக்கி நகர்கிறது..

தெளிவான திரைக்கதை படத்தை பார்க்க தோன்றுகிறது.. கதை இல்லாமலே வந்து கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு வலுவான கதையை எடுத்து சரியான முறையில் அதை எடுத்துச் சென்று இயக்குனர் வெற்றியடைய செய்திருக்கிறார்.. நடித்த அனைத்து நடிகர்களும் பாத்திரத்தில் ஏற்ப பொறுப்போடு நடித்திருக்கிறார்கள் .மூன்று நாட்களில்  வசூல் 21.45 கோடி

 

Tags :

Share via