விமானம் மீது பறவை மோதியதால் தரையிறக்கம்

by Staff / 13-07-2023 04:50:17pm
விமானம் மீது பறவை மோதியதால் தரையிறக்கம் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது, தினமும் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன,வாரத்தில் 5 நாட்களும் ஷார்ஜாவிற்கும், தினமும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.<br /> கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இன்று காலை 4 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது, இந்த விமானத்தில் 160க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர், விமானம் வானத்தில் பறக்க தொடங்கிய சில நிமிடத்திலேயே விமானத்தின் மீது பறவை மோதியது,<br /> இதையறிந்த விமானி உடனடியாக விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்து விமானத்தை அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார், இதையடுத்து அங்கிருந்த பொறியாளர்கள் உடனடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர் விமானம்.ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது,பறவை மோதியவுடன் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இதனால் கோவை விமான நிலையத்தில் இன்று சற்று பரபரப்பு ஏற்பட்டது.
 

Tags :

Share via