பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்ப்பு-திமுக பொதுச்செயலாளர்.

by Editor / 11-02-2024 10:06:46am
பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்ப்பு-திமுக பொதுச்செயலாளர்.

தமிழகத்தில் அரசியல்கட்சிகளிள் பொதுக்கூட்டம் என்றாலே காசுகொடுத்து ஆட்களைகூட்டிவரும் இன்றைய காலக்கட்டத்திற்கு முன்பு..சுமார்20 ஆண்டுகளுக்கு முன்புவரை அனைத்து அரசியல்கட்சிகள் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாக இருந்துவந்தது.அதிலும்  காங்கிரஸ் காட்சியிலும் சரி,,அதிமுக விலும் சரி..திமுகவிலும் சரி..நட்சத்திரப்பேச்சாளர்கள் கூட்டம் என்றுதனியாக உண்டு அவர்களுக்கு தணிகவனிப்புக்களும் கட்சியினரிடையே உண்டு. திமுக பொதுக்கூட்டம் என்றாலே தென்மாவட்டங்களில் தீப்பொறி ஆறுமுகம்,புளியங்குடி பழனிச்சாமி..சாட்டையடி சக்திவேல்..இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்..மேடை பேச்சால் வளர்ந்த இயக்கம் திமுக என்பதனை யாரும்மறுக்க முடியாது அப்படி பெயர் பெற்ற திமுகவில் 
திமுக பொதுக்கூட்ட மேடைகளில் எதிர்கட்சியினரை  இரட்டை அர்த்தத்தில் அநாகரீகமாக பேசுவதில் வல்லவர்கள்  என்று பெயர் எடுத்தவர்கள் நிறையபேர்  உண்டு..அதில்  தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிறைய பேச்சாளர்கள் அன்றைய தலைமுறையினரிடமும்,இன்றைய தலைமுறையினரிடமும்  நல்ல அறிமுகம். 

கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னை எருக்கஞ்சேரியில் கலைஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அநாகரீமாக பேசினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக தலைமை தற்காலிகமாக நீக்கி அறிவித்தது.

இந்த நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை வைத்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 
 

 

Tags : பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

Share via