பாஜகவுடன் கூட்டணி............. இபிஎஸ் மழுப்பல் பதில்

by Editor / 04-03-2025 03:26:26pm
பாஜகவுடன் கூட்டணி............. இபிஎஸ் மழுப்பல் பதில்

பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தலின்போது தெரிவிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, அப்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படும். எங்களுடைய ஒரே எதிரி திமுக தான். திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக உள்ளது" என பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via