கெட்டுப்போன மீன், கோழி இறைச்சி பறிமுதல்

by Staff / 10-09-2023 05:29:26pm
கெட்டுப்போன மீன், கோழி இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல்லில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த கெட்டுப்போன 30 கிலோ மீன், 15 கிலோ கோழி இறைச்சி, 42 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு ரூ. 9 ஆயிரம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் நகரில் செயல்படும் மீன், கோழி இறைச்சி கடைகளில் விற்கப்படும் இறைச்சிகள் கெட்டுப்போனதாக உள்ளது.அதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலு வலர் கலைவானி, பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திருச்சி ரோடு, பழநி ரோடு, ஆர். எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மீன், இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 3 கடைகளில் கெட்டுப்போன 30 கிலோ மீன், 15 கிலோ இறைச்சி, 42 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் என ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொது மக்களுக்கு சுகாதாரமான உணவு பொருட்களை விற்பனை செய்யவேண்டும். மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என இறைச்சி கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

 

Tags :

Share via