கேங் சப்ரஷன் போர்ஸ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பன்னாட்டுப் படை

by Admin / 08-04-2026 09:21:03am
 கேங் சப்ரஷன் போர்ஸ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பன்னாட்டுப் படை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கேங் சப்ரஷன் போர்ஸ்  என்ற புதிய பன்னாட்டுப் படை,  ஹைதியில் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது.மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டைச் சேர்ந்த ஒரு குழு ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் தரை இறங்கியது.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஐ.நா அதிகாரி ஜாக் கிறிஸ்டோஃபைட்ஸ் இந்தப் படையின் சிறப்புப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.ஹைட்டியில் சுமார் 90% தலைநகரைக் கட்டுப்படுத்தும் ஆயுதமேந்திய கும்பல்களை ஒடுக்குவது, முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். 

இந்தப் படையில் மொத்தம் 5,550 வீரர்கள் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. கோடை அல்லது இலையுதிர் காலத்திற்குள் முழுமையான எண்ணிக்கையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் கென்யா தலைமையில் செயல்பட்டஎம்.எஸ்.எஸ் (மல்டி நேஷனல் செக்யூரிட்டி சா்வீஸ் திட்டத்தைப் போலல்லாமல், இந்தப் புதிய சி எஸ் எப் படைக்குச் சந்தேகத்திற்குரிய கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம்ஐ நா பாதுகாப்பு கவுன்சிலால் கீழ் அங்கீகரிக்கப்பட்டு 12 மாத கால கட்டாய ஆணையுடன்செயல்படத் தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via
Logo