கல்பாக்கம் ஃபாஸ்ட் ப்ரீடர் அணு உலை ஒர் அணுசக்தி மைல்கல் - பிரதமர் மோடி பாராட்டு
கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை கிரிட்டிக்காலிட்டி எனப்படும் நிலைமாறு நிலையை வெற்றிகரமாக எட்டியது. இந்த வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் சிவில் அணுசக்தி பயணத்தில் ஒருதீர்க்கமான மைல்கல்என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியா தனது அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.இது இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப்பட்டு, பாவினி நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. இந்த அணு உலை தான் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.இது இந்தியாவின் மிகப்பெரிய தோரியம் இருப்புகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான மூன்றாம் கட்டத் திட்டத்திற்கு வழிவகுக்கும். ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக வணிக ரீதியிலான வேக ஈனுலையை இயக்கும் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் அயராத உழைப்பினால் சாத்தியமான இந்த நிகழ்வு, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கும் சுயசார்பு இந்தியாஇலக்கை எட்டவும் ஒரு பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
Tags :



















