தென்காசி புதிய ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடங்களை தமிழக உள்துறை செயலாளர் ஆய்வு.

by Editor / 01-12-2023 11:10:14pm
தென்காசி புதிய ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடங்களை தமிழக உள்துறை செயலாளர் ஆய்வு.


திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசியில் நடந்த விழாவில் தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கட்டிடப் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் புதிய மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கழித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 11.11 ஏக்கர் நிலம் ஆட்சியர் அலுவலகம் கட்டிட தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020-ம் ஆண்டு  நடைபெற்றது புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டிடம்6 மாடியில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டப்பட்டது.மேலும், இதன் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலக கட்டிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடத்தை தமிழக உள்துறை செயலாளர் அமுதா  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களையும், அலுவலக பயன்பாட்டிற்கும் உள்ள தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.முன்னதாக அவர் தென்காசி மங்கம்மா சாலையிலுள்ள பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைய உள்ள இடங்களையும் பாரவையிட்டார்.கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துவரும் நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : தமிழக உள்துறை செயலாளர் ஆய்வு.

Share via