இரு சக்கர வாகனங்கள் மோதல் : சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி .
திருச்சி மாவட்டம் . மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட்ராக பணிபுரிந்து வருபவர் மந்திரகுமார் . இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்த இவர், கடந்த மாதம் 30 ம் தேதி திண்டுக்கல்லிலிருந்து சாலை மார்க்கமாக திருச்சிக்கு தமிழக முதலவர் ஸ்டாலின் வருவதையொட்டி பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக 29 ம் தேதி மாலை திருச்சியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரவனூர் என்னுமிடம் அருகே செல்லும் போது எதிரே ஒரு வழிப் பாதையில் வந்த இரு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்த மந்திரகுமார் திருச்சி அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :