முதியோர் இல்லத்தில் 4 பேர் பலியான சம்பவம் -காப்பகத்தின் உரிமையாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை முதியோர் இல்லத்தில் மாமிச உணவு சாப்பிட்ட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் காப்பகத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட நபர்கள் தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தின் உரிமையாளரான ராஜேந்திரன் என்பவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், அன்னை முதியோர் இல்லத்தில் உரிமையாளரான ராஜேந்திரனுக்கு இன்றைய தினம் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அவரை போலீசார் செங்கோட்டை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்திய செங்கோட்டை நீதித்துறை நடுவர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Tags : முதியோர் இல்லத்தில் 4 பேர் பலியான சம்பவம் -காப்பகத்தின் உரிமையாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.