கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை-வானிலை ஆய்வு மையம்.

by Staff / 14-06-2025 09:44:59am
கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை-வானிலை ஆய்வு மையம்.

நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் (ஜூன் 14) நாளையும் (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று (ஜூன் 14) மிக கனமழைக்கும், திண்டுக்கல், தேனியில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags : கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று மிக கனமழை-வானிலை ஆய்வு மையம்.

Share via