12 வயது சிறுவனுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

by Staff / 27-09-2022 12:29:49pm
12 வயது சிறுவனுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

டெல்லி அருகே உள்ள சீலம்பூர் பகுதியில் 12 வயது சிறுவனை 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். அதில், எனது மகனை செப்டம்பர் 18ம் தேதி நான்கு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்தரங்கப் பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல் துறையினர் விசாரணையில் அந்தச் சிறுவனின் நணபர்கள் 3 பேர் இந்தச் செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அந்த 3 பேருக்கும் வயது 10 முதல் 12 தான் இருக்கும். இதுவரை 2 சிறுவர்களை கைது செய்துள்ளோம் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories