தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

by Staff / 18-02-2023 03:05:08pm
தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி, நாட்டில் முதன்முறையாக சட்டத்திருத்தம் கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் ஒரு கிரவுண்ட் மனையை போலியாக பொது அதிகாரப் பத்திரம் தயாரித்து சிலர் விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், பத்திரப்பதிவை பதிவாளரே ரத்து செய்ததை குறிப்பிட்டு நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories