இரண்டு படகுகளில் இருந்து 1347 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல்

மெக்சிகோ நாட்டின் ஓஸ்க மாகாணத்தில் 2 படகுகளில் இருந்து 1347 கிலோ கோகைன் போதைப் பொருளை அந்நாட்டின் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் சோதனையிட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின் தொடர்வது அறிந்த போதை கும்பல் தங்கள் வாகனத்தை கப்பலில் ஏற்றி கப்பல் வழியாக சென்றது. இதனை அடுத்து ஹெலிகாப்டரில் சென்ற போது அந்த கும்பல் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது. பின்னர் அந்த வாகனத்தில் இருந்து முப்பத்தி ஆறு மூட்டைகளில் கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags :