வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம்

by Editor / 29-08-2021 08:15:00pm
வேளாங்கண்ணி பேராலயத்தில்  கொடியேற்றம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8,ம் தேதி வரை 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், முதல் நாள் திருவிழாவான 29-ஆம் தேதி வேளாங்கண்ணி மாதா கோவிலில் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பேராலயத்தை சுற்றி கொடியானது உள்ளூர் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் கொடிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சரியாக மாலை 5:05 க்கு கொடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், ஆட்சியர் அருண் தம்புராஜ், பாதிரியார்கள் மற்றும் பணியாளர்கள் என 50 நபர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

 

Tags :

Share via