கனிமொழி எம்.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி

by Staff / 04-05-2023 12:16:46pm
கனிமொழி எம்.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி

தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமோழி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அனுமதித்து, 2019-ல் தூத்துக்குடி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிசெய்தது. வேட்பு மனுவில் முறைகேடு செய்திருப்பதாகவும், எம்.பி.யாக கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிடக் கோரி ஏ. சந்தான குமார் என்பவர் தாக்கல் செய்த தேர்தல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கனிமொழியின் வேட்பு மனு முறையாக இல்லை என்பதை நிரூபிக்க மனுதாரர் தரப்பில் ஒரு ஆதாரம் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
 

 

Tags :

Share via

More stories

Logo