ஜூன் 14 முதல்  அண்ணா பல்கலை.  தேர்வுகள் :அமைச்சர்  பொன்முடி

by Editor / 24-05-2021 06:30:54pm
ஜூன் 14 முதல்  அண்ணா பல்கலை.  தேர்வுகள் :அமைச்சர்  பொன்முடி

 

அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017 ஒழுங்குமுறைப்படி முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.மற்ற பல்கலைக் கழகங்களில் ஜூன் 15-ல் தொடங்கி ஜூலை 15-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவர் பேசியதாவது, 2017 ஒழுங்குமுறைப்படி எழுதிய இளநிலை மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி தேர்வு தொடங்குகிறது.
மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via