அமலாக்கத்துறை அதிகாரிகளை அலறவிட்ட தமிழக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.
திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இது போன்று பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளதுடன் அது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.இவர் மட்டுமின்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் அங்கித் திவாரியின் வீடு, அவருக்கு தொடர்புடைய இதர இடங்கள் மட்டுமின்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மேலும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி அறையை சோதனை செய்த அதிகாரிகள் தற்போது மற்ற அதிகாரிகளின் அறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
Tags : அமலாக்கத்துறை அதிகாரிகளை அலறவிட்ட தமிழக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.