வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு சிறுத்தை பலி -வனத்துறையினர் விசாரணை.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை காப்புக்காட்டுபகுதியாக விளங்கிவருகிறது.புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஊர்க்காடு கிராமத்தில் இன்று அங்குள்ள சுடுகாட்டுக்கு அருகில் 5வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஓன்று மர்மமாக இறந்த நிலையில் கிடைப்பதைக்கண்ட அந்தப்பகுதிமக்கள் இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து விரைந்த வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சிங்கபட்டி காப்புக்காடு பகுதியில் தீவைத்து எரித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழை வெள்ளத்தில் சிக்கி சிறுத்தை இறந்ததா அல்லது மின் வேலியில் சிக்கி இறந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :