செகந்திராபாத்தில் இருந்து தென்காசி வழியாக முதன்முதலாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து வருகின்ற டிசம்பர் 19,26 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்திலிருந்து கொல்லத்துக்குஇரவு 8 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது, நல்கொண்டா, குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்தை 21-28 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.21, 28 தேதிகளில் கொல்லத்திலிருத்து செகந்தராபாத்திற்கும் புறப்ப்டுகிறது.இந்த ரயிலில் 2 ஏசி 3 ஏசி இரண்டாம் வகுப்பு சிலீப்பர் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை 11 ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், முதன் முதலாக செகந்திராபாத்திலிருந்து தென்காசி வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : செகந்திராபாத்தில் இருந்து தென்காசி வழியாக முதன்முதலாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.