அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை-நயினார் நாகேந்திரன். 

by Staff / 26-06-2025 11:18:34pm
அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை-நயினார் நாகேந்திரன். 

 மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் கடந்த ஜுன் 22ம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்  பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் திமுகவினர், அதிமுக-வை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், அண்ணாவைப் பற்றிப் பேசினால் கடந்தகாலத்தில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். இதனால் பாஜக – அதிமுக கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டு விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக  பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், “2026ல் எங்களுடைய ஆட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கனவிலும் பிரச்னை வராது. அதிமுக – பாஜக கூட்டணி உண்மையான கூட்டணி, வெல்லும் கூட்டணி” என்று தெரிவித்தார்.

 

Tags : அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை-நயினார் நாகேந்திரன். 

Share via