கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது புதூர் பேரூராட்சி இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள பகுதிகளாக இந்த பேரூராட்சிக்குரிய பகுதியில் அமைந்துள்ளதால் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ளன இந்த வழியாக தினமும் 700 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி செல்வதால் சாலையின் ஓரத்தில் உள்ள குடிநீர் பைப்புகள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது இதன் காரணமாக பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வழங்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஏன் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இந்த நிலையில் கடந்த 20 தினங்களாக பேரூராட்சி பகுதியில் மேலப்புதூர் கீழப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்காமல் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு தாமதித்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் மாற்று ஏற்பாடு மூலமும் குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக இன்று கீழப்புதூர் பகுதியைச் சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக இரண்டு புறங்களும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின தொடங்கின இதன் தொடர்ச்சியாக விரைந்து வந்த புலியரை காவல்துறை உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை அனுமதியுங்கள் குடிநீர் பிரச்சனைக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியதை தொடர்ந்து சுமார் அரை மணி நேரமாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர் தொடர்ந்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags :