ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஃபட்னாவிஸ்

by Staff / 05-04-2023 11:48:19am
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஃபட்னாவிஸ்

மன்னிப்பு கேட்பதற்கு தான் சாவர்க்கர் இல்லை என்று தம்பட்டம் அடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் நிறைய மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ‘சுதந்திரவீர் சாவர்க்கர் கவுரவ் யாத்திரை’யின் ஒரு பகுதியாக புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார். ஏக்நாத் ஷிண்டே பிரிவினருடன் பாஜக தொண்டர்களும் யாத்திரையில் பங்கேற்றனர். "இந்த யாத்திரை சாவர்க்கரை தொடர்ந்து அவமதிக்கும் நபர்களுக்கு பதில். சாவர்க்கரின் இலட்சியத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்" என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo