அதிமுக தோழமை கட்சி - திருமாவளவன்

அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் அவர், "ஜெயலலிதாவின் தம்பியாக நான் அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும். அதிமுக தனது செல்வாக்கை இழந்து விட கூடாது என்பதை தோழமையுடன் சுட்டி காட்டுகிறேன். பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை இபிஎஸ் அறியாமல் இருக்கிறார்" என்று பேட்டியளித்துள்ளார்.
Tags :