வீடு திரும்பிய நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு முதுகெலும்பு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, வீடு திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், 2 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பி விடுவேன் என குஷ்பு குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளர். குஷ்பு விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
Tags :