மாடுகள் மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம்

by Staff / 06-10-2022 05:34:59pm
மாடுகள் மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம்

கடந்த வாரம் பிரதமர் மோடி தொடங்கி வைத்த காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,குஜராத்தின் மணிநகரில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்தது.

நாட்டின் பெருமை என இந்திய ரயில்வே வழங்கிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. ரயில் கடந்து செல்லும் போது மாடுகள் தண்டவாளத்தை கடந்ததால் விபத்து ஏற்பட்டது. மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இன்று நடந்துள்ளது.

சுமார் 11:15 மணியளவில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் மாடுகள் மீது மோதியது. வட்வா மற்றும் மணிநகர் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஏராளமான மாடுகளும் உயிரிழந்தன. மேலும் ரயிலின் இன்ஜினின் ஒரு பகுதியும் உடைந்தது.

நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நாட்டில் தற்போது மொத்தம் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புது தில்லி-வாரணாசி மற்றும் புது தில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே வேறு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

Tags :

Share via