2 ஆயிரத்தை தாண்டியது ஒமைக்ரானால் பாதிப்பு

by Admin / 05-01-2022 12:04:18pm
 2 ஆயிரத்தை தாண்டியது ஒமைக்ரானால் பாதிப்பு

   
நாடு முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த விமான பயணிகள் மூலம் முதன் முறையாக கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைந்த ஒமைக்ரான் வைரஸ்,

நேற்றைய நிலவரப்படி 24 மாநிலங்களில் பரவி இருக்கிறது. நேற்று மட்டும் புதிதாக 153 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறிப்பட்டதால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 2043 ஆக உயர்ந்துள்ளது.  

நாட்டிலேயே  அதிக எண்ணிக்கை ஒமைக்ரான் பாதிப்பு மாநிலமாக  மகாராஷ்டிரா உள்ளது. டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் ஒமைக்ரான் பரவி வருகிறது. 

தற்போது புதிதாக மேகாலயா மாநிலமும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் ஒடிசாவில் பூரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று 3 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிக்கும், ஓட்டல் பணியாளர்கள் 2 பேருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஓட்டல் நுண்கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 18 பேருக்கு ஒமைக்ரான் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அங்கு இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

 

Tags :

Share via