சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயார்த்தவர் கைது

by Staff / 16-03-2024 01:41:09pm
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயார்த்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் கேகே நகர் பகுதியில் திருத்தங்கல் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் (எ) திலீபன் ( 57) தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து செல்வராஜ் வீட்டில் சோதனை செய்து பெட்டிகள் 16 கேஸ் பெட்டிகள் பட்டாசுகளும் பட்டாசு தயாரிப்புக்கான மூலப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசை தயாரித்த செல்வராஜ் என்கின்ற திலீப்பினை போலீசார் கைது செய்தனர்.இவர் மீது சங்கரன்கோவில், திருத்தங்கல் , சிவகாசி கிழக்கு ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories