ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக இரயில்வே அறிவிப்பு

by Editor / 07-07-2022 08:38:04pm
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக இரயில்வே அறிவிப்பு

சிவகங்கை - மேல கொன்னகுளம் மற்றும் மானாமதுரை - சூடியூர் ரயில் நிலையங்கள் இடையே ஜூலை மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக  ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஜூலை 7 முதல் ஜூலை 31 வரை ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு 80 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். 

மேலும் திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஜூலை 11 முதல் ஜூலை 27 வரை ஜூலை 29 முதல் ஜூலை 31 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

 

Tags : Track Maintenance Works - Change in Rail Traffic: Southern Railway Notification

Share via