லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயரும்
கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்தநிலை விலகி, வருவாய் உயர தொடங்கியது. இதன் அடிப்படையில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை ஆய்வு நிறுவனம் ஒன்று திரட்டியது. இதில் வளர்ந்த நாடுகளை காட்டிலும், வளரும் நாடுகளில் தொழில் லாபம் ஈட்டியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரியவந்தது.இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு லட்சாதிபதிகள் எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரமாக இருந்தது. இப்போது லட்சாதிபதிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த உயர்வு இதே நிலையில் நீடித்தால் வருகிற 2026-ம் ஆண்டு இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை சுமார் 16 லட்சமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 2021-ம் ஆண்டை விட இந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாக இருக்கும்.
Tags :