சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றியுள்ளனர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஒரு சிவில் வழக்கை பதிவு செய்து, அதை கிரிமினல் வழக்காக மாற்றி, சிபிசிஐடி விசாரணை என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது, 31 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் அரசியல் சார்ந்த வழக்குகள். சிபிசிஐடி, போலீஸ் காவலில் நான் இருந்தபோது என்னை யாரும் துன்புறுத்தவில்லை என கூறினார்.
Tags :