கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்;சிபிஐ விசாரணை தொடக்கம்.

by Staff / 17-10-2025 09:42:18am
கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்;சிபிஐ விசாரணை தொடக்கம்.

கரூரில் கடந்த செப்., 17ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர். குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், சிபிஐ ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோரும் கரூர் வருகை தந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து இன்று அல்லது நாளை சிபிஐ விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்;சிபிஐ விசாரணை தொடக்கம்.

Share via