அதிருப்தியில் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?

by Editor / 20-06-2026 01:27:38pm
அதிருப்தியில் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் கட்சியின் கரை வேட்டி அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மனோ தங்கராஜ், அண்மையில் நடந்த நீட் தேர்வு ரத்து ஆர்ப்பாட்டத்தில் திமுக கரைவேட்டி இல்லாமல் பங்கேற்றார். முன்னதாக 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் தொடர்ந்து வென்று வந்த பத்மநாபபுரம் தொகுதி, கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via
Logo