அரசு பள்ளி வகுப்பறையில் ரீல்ஸ்: தவெகவினரின் செயலுக்கு அண்ணாமலை கண்டனம்

by Editor / 20-06-2026 01:16:46pm
அரசு பள்ளி வகுப்பறையில் ரீல்ஸ்: தவெகவினரின் செயலுக்கு அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே அரசு பள்ளி வகுப்பறை சுவற்றில் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை மாட்டி, 20-க்கும் மேற்பட்ட தவெகவினர் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இத்தகைய செயல்பாடுகள் அரசு பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்கள் நடைபெறாதவாறு தவெகவினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via
Logo