தமிழக அமைச்சரின் MLA அலுவலகம் மூடல்

மதுரையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் எம்.எல்.ஏ. அலுவலகம் பயன்பாட்டில் இல்லாமல் பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையமும் செயல்படாமல் உள்ளதாகவும், இதனால் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க முடியவில் என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்த தபால், மனுக்கள் பிரிக்கப்படாமல் குப்பையாக மாறியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
Tags :