பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை நிறுத்தும்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல இன்று (பிப்., 28) ஒரு நாள் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீண்டும் நாளை (மார்ச் 01) வழக்கம்போல் ரோப் கார் சேவை இயங்கப்படும்.
Tags :