நெல்லைமாவட்டத்தின் சராசரி மழை பொழிவு 19 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

by Editor / 23-05-2024 09:51:07am
நெல்லைமாவட்டத்தின் சராசரி மழை பொழிவு 19 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழையினால் மாவட்டம் முழுவதும் சுமார் 34 சென்டி மீட்டர் அதாவது 333.8 மில்லி மீட்டர்  மழைப்பொழிவு இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான நாலு முக்கில் அதிகபட்சமாக 6.2 சென்டிமீட்டர் அதாவது 62 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது

சமவெளி பகுதியான ராதாபுரத்தில் அதிகபட்ச அளவாக 44 மில்லி மீட்டர் அதாவது 4.4 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகி மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக களக்காட்டில் 29.6 மில்லி மீட்டரும் நான்கு நேரில் 20.8 மில்லி மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் மூன்று மில்லி மீட்டர் சேரன் மகாதேவியில் மூன்று புள்ளி இரண்டு மில்லிமீட்டர் மணிமுத்தாறில் ஆறு புள்ளி நான்கு மில்லி மீட்டர் பாளையங்கோட்டையில் 1.2 மில்லி மீட்டர் பாபநாசத்தில் நான்கு மில்லிமீட்டர் திருநெல்வேலி யில் ஒரு மில்லிமீட்டர் சேர்வாலாறு அணை பகுதியில் ஆறு மில்லி மீட்டர் கனடியன் மலைப்பகுதியில் 11.6 மில்லி மீட்டர் கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் 18 மில்லி மீட்டர் மூலைக்கரை பட்டியில் 5 மில்லி மீட்டர் என பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

நெல்லையின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 21 மில்லி மீட்டர் காக்காச்சியில் 38 மில்லி மீட்டர் ஊத்து பகுதியில் 59 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் சுமார் 34 சென்டிமீட்டர் மழை கொட்டியது.மாவட்டத்தின் சராசரி மழை பொழிவு 19 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது

 

Tags : நெல்லை

Share via