விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை

விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்தராய் ஆகியோர் விவசாயிகளுடன் நான்காவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதுவரை பிப்ரவரி 8, 12, 15 ஆகிய தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம், சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி ஆகியவை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளாகும்.
Tags :