சிக்கலில் இருந்து தப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ்

by Staff / 16-12-2023 12:49:17pm
சிக்கலில் இருந்து தப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ்


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த வழக்கில் க்ளீன் சிட் பெற்றார். திருச்சியைச் சேர்ந்த பிரணவ் ஜுவல்லரி குழுமத்திற்கு எதிராக ரூ.100 கோடி மோசடி புகார் எழுந்தது. இந்த வழக்கில் இந்தக் கடையின் விளம்பர தூதுவராக உள்ள பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் சம்மன் அனுப்பியிருந்தது. தற்போது இந்த மோசடிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று போலீசார் தெரிவித்ததையடுத்து தன்னை நம்பியவர்களுக்கு பிரகாஷ்ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன், அவரது மனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது திருச்சி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo