அதிக பாரம் ஏற்றி வந்த 16 லாரிகள் பறிமுதல்

by Staff / 28-02-2023 01:18:45pm
அதிக பாரம் ஏற்றி வந்த 16 லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள். மேலும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேசமணி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமை யிலான போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அனுமதியின்றி அதிக பாரத்துடன் மணல் ஏற்றி வந்த 11 லாரிகளை பிடித்தனர். பிடிபட்ட டிரைவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த லாரிகளை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அபரா தம் விதித்தனர். இதே போல் மாவட்டம் முழுவ தும் நேற்று இரவு போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமை யில் போலீசார் இன்று அதிகாலை புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து எம். சாண்ட் பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளை போலீசார் ஆய்வு செய்தனர். லாரியின் மீது சந்தேகம் அடைந்து எடை மேடை யில் கொண்டு ஆய்வு செய்த போது அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த 5 லாரிகளை பறிமுதல் செய்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

 

Tags :

Share via