பணகுடி அருகே பெட்ரோல் பங்கில் திருடிய நபர் கைது.
நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்கு வள்ளியூர் கானா ஊரில் உள்ள பெட்ரோல் பல்கை நாகர்கோயில் பார்வதிபுரம் கிறிஸ்டோபர் காலணியை சேர்ந்த ஜோசி தாமஸ் (32) என்பவர் சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். 20.05.2023 அன்று இரவு பல்கில் வேலை செய்பவர்கள் ரூ. 16 ஆயிரம் பணத்தை ஆபீஸ் ரூமில் உள்ளே மேஜை மேல் ஒரு பையில் வைத்து விட்டு தூங்கியதாகவும் பின் அதிகாலையில் எழுந்து பார்த்த போது பணத்தையும் அங்கு வேலை செய்த இருவருடைய செல்போனையும் காணவில்லை. இதுகுறித்து ஜோதி தாமஸ் பண குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பென்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கேரளா மாநிலம், திருவனந்தபுரம், பீமா பள்ளி, குண்ணு வளாகத்தை சேர்ந்த இன்னாது முகமது (20) என்பவர் மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் இன்னாது முகமதை கைது செய்தார்.
Tags :



















