ரூ.3 கோடி பணத்தை எரித்து, அதை கழிவறையில் கொட்டியசூப்பிரண்ட் இன்ஜினியர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஊரக வளர்ச்சி துறையில் சூப்பிரண்ட் இன்ஜினியராக இருப்பவர் வினோத் குமார். இவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிகளவில் லஞ்சம் வாங்கி சொத்துகளை சேர்த்துள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனை நடத்தியபோது அவர் தனது மனைவியுடன் சேர்ந்து ரூ.3 கோடி பணத்தை எரித்து, அதை கழிவறையில் கொட்டியது தெரியவந்துள்ளது. மேலும், அவர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
Tags : ரூ.3 கோடி பணத்தை எரித்து, அதை கழிவறையில் கொட்டியசூப்பிரண்ட் இன்ஜினியர்.



















