கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 190க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 55 பேர் உயிரிழந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) மேலும் இருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
Tags : கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.