தேர்தல் ஆணையர் தேர்வு: பரபரப்பு தீர்ப்பு

by Staff / 02-03-2023 12:23:25pm
தேர்தல் ஆணையர் தேர்வு: பரபரப்பு தீர்ப்பு

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தற்போதைய நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையத்தை நியமிக்க உத்தரவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இல்லையென்றால், எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அக்குழுவில் இருக்க வேண்டும், அக்குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவார்.

 

Tags :

Share via

More stories

Logo